படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தமிழ் திரைப்படக் கலைஞர்களாலும், ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடும், மரியாதையோடும் அழைக்கப்படுபவர் நடிகை மனோரமா. 'பள்ளத்தூர் பாப்பா'வாக அன்று நாடகங்களில் கொடிகட்டிப் பறந்த இவர், கவியரசர் கண்ணதாசனின் தயாரிப்பில் வெளிவந்த “மாலையிட்ட மங்கை” என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு நட்சத்திரமாக அறிமுகமானார். சிறு சிறு வேடமேற்று நடித்துக் கொண்டிருந்த இவர், சிருங்கார நாயகியாக அறிமுகமானதன் பின்னணி அலாதியான ஒன்று.
இயக்குநர் ஸ்ரீதரின் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடந்து கொண்டிருந்தபோது, அப்படத்தின் கலைஞர்களும், டெக்னீஷியன்களும் திருச்சூரில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அதில் சில கலைஞர்கள் அருகிலுள்ள குருவாயூர் கோயிலுக்குச் சென்று குருவாயூரப்பனை தரிசித்த போது, அக்கோயிலைச் சுற்றிச் சிறு சிறு விளக்குகள் பிணைக்கப்பட்டிருந்ததைக் கண்டு விளக்கம் கேட்க, வரும் பக்தர்கள் ஏதாவது வேண்டிக் கொண்டு அது பலித்துவிட்டால், இந்த விளக்குகளுக்கு எண்ணை ஊற்றி, திரி இட்டு ஏற்றி வைப்பார்கள் என அங்குள்ள ஒருவர் விளக்கமளித்தார்.
'குருவாயூரப்பா!' நான் இறக்கும் முன் என் மகள் ஒரே ஒரு படத்திலாவது கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதற்கு உன் அருள் வேண்டும். அவ்வாறு நடந்து விட்டால் இங்குள்ள விளக்குகளுக்கு எண்ணை ஊற்றி, திரி இட்டு ஏற்றி வைக்கின்றேன் என நடிகை மனோரமாவின் தாயார் வேண்டிக் கொள்ள, படப்பிடிப்பு முடிந்து சென்னைக்கு வந்த அன்று, நடிகை மனோரமாவிற்கு “மாடர்ன் தியேட்டர்ஸ்” தயாரிப்பு நிறுவனத்திலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. கடிதத்தில் உன்னை எங்களது அடுத்த படமான “கொஞ்சும் குமரி”யில் நாயகியாக ஒப்பந்தம் செய்திருக்கின்றோம். உடனே வந்து சந்திக்கவும் என அந்நிறுவனத்தின் அதிபரும் இயக்குநருமான ஆர் சுந்தரம் எழுதியிருந்தார். அதன்படி நேரில் சென்று சந்தித்து “கொஞ்சும் குமரி” திரைப்படத்தின் நாயகியானார் 'ஆச்சி' மனோரமா அந்த குருவாயூரப்பன் அருளால்.