சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பிரபல தெலுங்கு நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு தற்போது கண்ணப்பா என்கிற புராண படத்தை தயாரித்து நடித்துள்ளார். பான் இந்தியா திரைப்படமாக இதை உருவாக்கும் நோக்கில் பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார், தெலுங்கில் பிரபாஸ், மலையாளத்திலிருந்து மோகன்லால் என முன்னணி பிரபல நட்சத்திரங்களை இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைத்துள்ளார். வரும் ஏப்ரல் 25ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ளார் விஷ்ணு மஞ்சு.
அதன் ஒரு பகுதியாக நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆத்யநாத்தை நேற்று நேரில் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது விஷ்ணு மஞ்சுவுடன் அவரது தந்தை மோகன் பாபு மற்றும் நடிகர் பிரபுதேவாவும் உடன் இருந்தனர். அப்போது முதல்வருக்கு ஓவியம் ஒன்றை விஷ்ணு மஞ்சு பரிசாக வழங்கினார். முதல்வர் யோகி ஆத்யநாத்தும் படத்தின் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரபுதேவா இந்த படத்தில் நடிக்கவில்லை என்றாலும் இந்த படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த வகையில் அவரும் இந்த சந்திப்பின்போது கண்ணப்பா குழுவினருடன் இணைந்து சென்று யோகி ஆத்யநாத்தை சந்தித்துள்ளார்.