தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா |
'புஷ்பா 2' படத்தில் அல்லு அர்ஜுனின் முரட்டுத்தனமான தோற்றமும் அந்தப் படத்தின் வரவேற்புக்கு ஒரு காரணம் என தெலுங்குத் திரையுலகினர் நம்புகிறார்கள். அதனால், அதே ஸ்டைலில் தங்களது ஹீரோக்களின் தோற்றத்தை டிசைன் செய்வதை அவர்கள் செய்து வருகிறார்கள்.
புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் 'பெத்தி' படத்தில் அது போன்ற முரட்டுத்தனமான தோற்றத்தைத்தான் ராம் சரண் கதாபாத்திரத்திற்கு அமைத்துள்ளார் இயக்குனர். அதன் முதல் பார்வை வந்த போதே அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் அதை கிண்டலடித்தனர்.
அடுத்து நாகார்ஜுனா, அமலா ஆகியோரின் மகன் அகில் நடிக்கும் அடுத்த படமான 'லெனின்' படத்திற்கும் அது போன்ற ஒரு தோற்றத்தையே அவருக்கு உருவாக்கியுள்ளார்கள். மிகவும் வெள்ளை நிறத்தவரான அகிலுக்கு, தாடி, மீசை, கொஞ்சம் நீள தலைமுடி, கருப்புத் தோற்றம் என சிரமப்பட்டு மாற்றியுள்ளார்கள்.
டோலிவுட்டில் அடுத்து இந்தத் தோற்றத்தில் யார் தங்களை மாற்றிக் கொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.