தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ராம் சரண். தற்போது 'பெத்தி' எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தனது மனைவி உபாசனா காமினேனி உடன் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.
இதற்கான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ராம் சரண், உலகின் முதல் 'வில்வித்தை பிரிமியர் லீக்' போட்டிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததற்காக பிரதமரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், ''அனில் காமினேனி தலைமையிலான உலகின் முதல் வில்வித்தை பிரீமியர் லீக்கின் வெற்றி குறித்து நமது பிரதமர் மோடியை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். வில்வித்தையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் அதை உலகம் முழுவதும் ஊக்குவிப்பதற்கும் இது எங்கள் சிறிய படியாகும். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள், இந்த அற்புதமான விளையாட்டில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்புகிறோம்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இச்சந்திப்பின்போது, பிரதமருக்கு திருப்பதி வெங்கடாஜலபதியின் சிலையை பரிசாக வழங்கினார் ராம்சரண்.