ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
‛விடாமுயற்சி' படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. அதோடு இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்திலேயே அஜிதகுமார் நடிக்கயிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அஜித் நடிப்பில் ‛மங்காத்தா' படத்தை இயக்கிய வெங்கட் பிரபு, தற்போது ‛மங்காத்தா 2' படம் குறித்த கேள்விக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛மங்காத்தா -2 படத்தை இயக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதேபோன்று எனக்கும் அந்த படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதோடு, மங்காத்தா- 2 இல்லாமல் வேறு கதையை அஜித்திடம் சொல்லி ஓகே பண்ணி அந்த படத்தை இயக்கலாமா? என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது. முக்கியமாக அஜித்குமாரை பொறுத்தவரை எப்போது எந்த இயக்குனரை தேர்வு செய்வார் என்பதை கணிக்கவே முடியாது.
‛சென்னை -28, சரோஜா, கோவா' போன்ற சிறிய படங்களை நான் இயக்கியிருந்த நேரத்தில் திடீரென்று எனக்கு ‛மங்காத்தா' படத்தை இயக்கும் ஒரு வாய்ப்பை கொடுத்தார். அதனால் கவனிக்கப்படும் இயக்குனரானேன்'' என்று கூறும் வெங்கட்பிரபு, ‛‛என்னைப்பொறுத்தவரை மங்காத்தா- 2 படத்தை இயக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அஜித் அவர்கள் சொல்லும் பதிலில்தான் அந்த படம் உருவாகுமா? இல்லையா? என்பது தெரியும். அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்'' என்கிறார் வெங்கட் பிரபு.