மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” |

நடிகை மஞ்சு வாரியர் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக உயர்ந்த காலகட்டத்திலும் சரி, அதன்பிறகு சினிமாவுக்கு இடைவெளி விட்டு மீண்டும் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் 15 வருடங்களாக மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வரும்போதும் சரி, தனது உயிர் மூச்சான நடனத்தை எப்போதும் கைவிட்டதில்லை. அவர் சினிமாவிற்கு இடைவெளி விட்ட காலத்தில் கூட நடனத்தில் விடாமல் கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் உலக நடன தினத்தை முன்னிட்டு மஞ்சு வாரியர் தான் நடன பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.
அவரது குச்சுப்புடி நடன ஆசிரியை கீதா பத்மகுமார் வீடியோ கால் மூலமாக கொடுத்த பயிற்சிக்கு ஏற்ப அந்த வீடியோவில் மஞ்சு வாரியர் பயிற்சி செய்கிறார். அப்போது தன்னை அறியாமல் இரண்டு ஸ்டெப்ஸ்களை மாற்றி போட்ட மஞ்சு வாரியர், அதை எதிரில் இருக்கும் தனது ஆசிரியையை பார்த்து சிரித்துக் கொண்டே மன்னிப்பு கேட்பது போல, மீண்டும் சரியான நடன அசைவுக்கு திரும்பி அந்த பயிற்சியை செய்கிறார். தான் செய்த தவறை அவர் அப்படி அழகாக மாற்றிக்கொண்ட இந்த க்யூட் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.