நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
சென்னையில் நேற்று நடந்த கஜானா பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில், ‛‛இந்த படத்தில் நடித்த யோகிபாபு பட பிரொமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுக்கிறார். அதற்கு தனியாக 7 லட்சம் கேட்கிறார். இது தவறு. அவர் நடிக்க லாயக்கு அற்றவர், இது மோசமான செயல்" என தயாரிப்பாளர் ராஜா என்பவர் குற்றம் சாட்டினார்.
ஆனால் யோகிபாபு தரப்போ "அந்த படத்தின் தயாரிப்பாளர் சாம் என்பவர். இவர் யார் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. யோகிபாபு அவ்வளவு பிசியாக இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் நடித்து வருகிறார். இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பாதிப்பு வரும். அதனால் பல லட்சம் இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க நேரிடும். இதை மற்ற படக்குழுவினர் புரிந்து கொள்ள வேண்டும். ஆனாலும் முடிந்தவரை தான் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார்" என்கிறது.