மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
எம்.எஸ்.விஸ்வநாதன் வருகைக்கு முன்பு திரையுலகில் ஆட்சி செய்தவர்கள் ஜி.ராமநாதன், பாபநாசம் சிவன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் இவர்களுக்கு நிகராக அன்றைக்கு இருந்த இன்னொருவர் எஸ்.வி.வெங்கட்ராமன். ஆனால் அவரை பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை. இவர் இசை அமைப்பாளராக மட்டுமின்றி நடிகர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முக தன்மை கொண்டவராக இருந்தார்.
சோழவந்தான் வரதராஜன் வெங்கட்ராமன் என்பதன் சுருக்கம்தான் எஸ்.வி.வெங்கட்ராமன். திரையுலக வட்டாரத்தில் 'எஸ்வி' என செல்லமாக அழைப்பார்கள். 1938 முதல் 1970 வரை இந்தியத் திரைப்படத் துறையில் பணியாற்றினார். 200கும் அதிகமான படங்களுக்கு இசை அமைத்தார்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்த 'மீரா' படத்திற்கு இசை அமைத்தது இவரது புகழ் மகுடத்தின் வைரம். கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைத்துள்ளார். நந்தகுமார், தாசில்தார், வால்மீகி, மனோன்மணி, கண்ணகி, நந்தனார், நாக பஞ்சமி, ஸ்ரீ முருகன், மனோகரா, இரும்புத்திரை போன்றவை அவர் இசை அமைத்த முக்கியமான படங்கள்.
எஸ்.வி.வெங்கட்ராமனுக்கு மூன்று வயதாக இருந்தபோது, அவரது தந்தை இறந்தார். பின்னர் அவர் தனது மாமா வீட்டில் வளர்ந்தார். இசை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர் இசை கற்பதற்காக சென்னை சிந்தாரிப்பேட்டைக்கு வந்தார். பின்னர் நாடக குழுவில் சேர்ந்து நாடகத்திற்கு இசை அமைத்தார், பாடல்கள் பாடினார், நடிக்கவும் செய்தார்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ராமராவ் என 5 முதல்வர்களுடன் பணியாற்றினார். எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி, ஜி.கே.வெங்கடேஷ் உள்ளிட்ட பல பிரபல இசையமைப்பாளர்கள் இவரது இசை குழுவில் பணியாற்றி உள்ளனர்.