சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
ஒரு படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகி விடும் ஆனால் படம் தோல்வி அடைந்து விடும். இப்படியான நிகழ்வு அவ்வப்போது நடக்கும். இதற்கெல்லாம் முன்னோடியாக முதல் முறையாக பாட்டு ஹிட்டாகியும் தோல்வி அடைந்த படம் 'தேவமனோகரி'.
சபாபதி, ஸ்ரீவள்ளி, அறிவாளி, மனம் ஒரு குரங்கு உட்பட சில படங்களை இயக்கிய ஏடி.கிருஷ்ணசாமி இயக்கியிருந்தார். ஹொன்னப்ப பாகவதர், பானுமதி, பி.எஸ்.சரோஜா, எம்.ஆர்.சுவாமிநாதன், காளி என்.ரத்னம், ஆர்.பத்மா, ஜி.எம்.பஷீர், வி.கே.கார்த்திக்கியேன் உட்பட பலர் நடித்த படம். 1949ம் ஆண்டு வெளியானது.
தெய்வத்தால் ஆசீர்வதிக்கப்பட்ட இளவரசி மனதை வெல்ல பல இளவரசர்கள் போட்டியிடுகின்றனர். தான் இளவரசன் எனத் தெரியாமல் இருக்கும் ஹொன்னப்ப பாகவதர் மீது தேவமனோகரிக்கு காதல் வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது படம். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் .
இந்தப் படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாபநாசம் சிவன், அவர் சகோதரர் ராஜகோபாலய்யர், தஞ்சை ராமையா தாஸ் பாடல்கள் எழுதியிருந்தனர். பானுமதியின் குரலில் 'இந்திரனோ இவர் சந்திரனோ', 'சேலைகட்டிய மாதரை நம்பி காலத்தை கழிக்காதே..', 'மதனா நீ வா', ஹொன்னப்ப பாகதவரின் குரலில் 'தாயே பராசக்தியே' உட்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.
திருவிதாங்கூர் சகோதரிகளின் (பத்மினி, ராகினி) நடனமும், பாடல்களும் பேசப்பட்டாலும் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.