ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'ஒரு அடார் லவ்' படம் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் அவர் நடித்த கதாபாத்திரம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். தற்போது அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பிரியா அதன்மூலம் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார். சமீபத்தில் அவர் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் அவர் தனது கேரியர் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அஜித் மற்றும் அர்ஜூன் தாஸ் உடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிறைவேறிவிட்டது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குனர் மணிரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கேரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.