நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது 23வது படமான 'மதராஸி' படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடிக்கின்றார். வித்யூத் ஜம்வல், விக்ராந்த், சபீர், பிஜூ மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, ஸ்ரீ லஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' படத்தில் பிஸியானதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க தற்போது 'மதராஸி' படக்குழு இலங்கையில் உள்ளனர். இதில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜம்வல், ருக்மணி வசந்த் ஆகியோர் காட்சியை பிரதானமாக 15 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி மிலாடி நபி வாரத்தையொட்டி திரைக்கு வருகிறது.