ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

இந்திய சினிமாவின் பெரிய ஆளுமை சாந்தாராம். ஹிந்தி மற்றும் மராட்டிய மொழிகளில் பிரமாண்ட படங்களை தயாரித்தார், இயக்கினார். தமிழில் 'சீதா கல்யாணம்' என்ற படத்தை தயாரித்தார். இவர் இயக்கிய பிரமாண்ட ஹிந்திப் படமான 'அப்னா தேஷ்' என்ற படம் 'நம் நாடு' என்ற பெயரில் தமிழில் வெளியானது.
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் பின்னணியில், உருவான படம். சுதந்திரம் அடைந்த பின் இந்தியா எதிர்கொண்ட பிரச்னைகளை இந்தப் படம் பேசியது. அப்போது பிரபல பாடகியாக இருந்த புஷ்பா ஹன்ஸ் நாயகியாக நடித்தார். உமேஷ் சர்மா, சந்திரசேகர், கேசவ் ராவ் ததே உட்பட பலர் நடித்த இந்தப் படத்திற்கு புருஷோத்தம் இசை அமைத்தார்.
தமிழ் பதிப்புக்கு ஜி.கோவிந்த ராஜுலு இசை அமைக்க, பாடல்களை ராஜகோபால ஐயர் எழுதினார். 1949ம் ஆண்டு தமிழில் ரிலீஸான இந்த படம் தெலுங்கிலும் வெளியானது. இந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற இந்த படம், தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. அறிமுகமில்லாத நடிகர்கள் நடித்திருந்ததும், வட மாநில மக்களின் வாழ்வியலை கொண்டிருந்ததும் படத்தின் தோல்விக்கு காரணம் என்பார்கள்.