2025 வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? |

சேரன் நடித்த தமிழ்குடிமகன் படத்தை இயக்கியவர் இசக்கி கார்வண்ணன். அவரின் அடுத்த படம் பரமசிவன் பாத்திமா. மதம் மாற்றம் பிரச்னையை கதை பேசுகிறது. விமல் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் ஜூன் 6ம் ரிலீஸ். ஜூன் 5ம் தேதி கமலின் தக்லைப் படம் ரிலீஸ் ஆவதால், இந்த படத்துக்கு அதிக தியேட்டர் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த பட விழாவுக்கு வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேட்டபோது, ‛‛அந்த காலத்தில் ஒரே நேரத்தில் 10 படங்கள் வரும். அதேபோல், தக்லைப் வருகிறது. இந்த படமும் வருகிறது. அதை பார்த்தவர்கள் இதையும் பார்ப்பார்கள். அண்ணன் கமலின் ஆளுங்கட்சி நிலைப்பாடு குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். நான் எதை சொல்ல? நான் அரசியலில் தீவிரமாக இருந்தாலும், முன்னாள் காதலி மாதிரி சினிமாவை நினைக்கிறேன். அந்த காதலிக்கு திருமணம் ஆகிவிட்டாலும், அவள் நல்லா இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மாமன், டூரிஸ்ட் பேமிலி மாதிரியான நல்ல படங்கள் ஓடுவது மகிழ்ச்சி. இனி படம் இயக்க வாய்ப்பில்லை. நானும் ஒரு படத்தில் நடித்து இருக்கிறேன். அது பற்றி அறிவிப்பு வரும்'' என்றார்.