தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சின்னகவுண்டர், எஜமான், கிழக்குவாசல், சிங்காரவேலன், பொன்னுமணி, ராஜகுமாரன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் ஆர்.வி.உதயகுமார். தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவராக இருக்கிறார். இப்போது ஆர்.வி.உதயகுமார் பிஸியான நடிகர் ஆகிவிட்டார். அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை 50ஐ தொடப்போகிறது.
நடிகர் அவதாரம் குறித்து அவர் பேசுகையில் 'நான் இயக்கிய சின்ன கவுண்டர், எஜமான் படங்களில் சின்ன, சின்ன வேடங்களில் நடித்தேன். பின்னர், பிரபுதேவா நடித்த தேவி படத்தின் மூலம் நடிகராக ரீ என்ட்ரி ஆனேன். தனுசின் தொடரியில் நல்ல வேடம். அதை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறேன். குறிப்பாக, சூரியின் கருடன் படத்தில் நான் அமைச்சராக நடித்தது நல்ல பெயரை பெற்று கொடுத்தது. அடுத்து இன்னொரு படத்தில் முதல்வராக நடித்து இருக்கிறேன்.
இப்போது பிரபு நடிக்கும் ராஜபுத்திரன் படத்தில் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்து இருக்கிறேன். தாதா மாதிரியான ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் அது. இந்த படங்களை தவிர, எழில் இயக்கும் தேசிங்குராஜா 2 மற்றும் ரெட் லேபிள் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறேன். அது குறித்த அறிவிப்பு முறைப்படி வரும். இயக்குனராக பல வெற்றி படங்களை கொடுத்தது மாதிரி, நடிப்பும் நிறைவாக இருக்கிறது' என்கிறார்.