10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

எச் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட படம் 'ஜனநாயகன்'.
தணிக்கை சான்றிதழ் விவகாரம், ரிவைசிங் கமிட்டி, உயர்நீதிமன்ற வழக்கு, உச்சநீதிமன்ற முறையீடு, வழக்கு வாபஸ் என கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக நடந்தவை அனைத்தும் சினிமா ரசிகர்களுக்குத் தெரியும்.
கடந்த வாரம் வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். அதன்பின் ரிவைசிங் கமிட்டி படத்தைப் பார்க்கும் வேலைகள் ஆரம்பமாகி இருக்க வேண்டும். ஆனால், அது எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி தணிக்கை வாரியத்திற்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் மட்டுமே தெரியும்.
அதன் வேலைகள் முடியும் வரை தணிக்கை வாரியம் இது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிட வாய்ப்பில்லை. அதே சமயம் படத்தை வெளியிடும் முடிவை எடுக்க வேண்டியது தயாரிப்பு நிறுவனம். தமிழக சட்டசபைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக படம் வெளிவர வேண்டும். அதற்குள் படம் வரவில்லை என்றால் தேர்தல் முடிந்த பிறகே வெளியிட முடியும்.
தமிழகத்தில் உள்ள வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் 'ஜனநாயகன்' எப்போது வரும் என்பது குறித்து எந்தவித தகவலும் தெரியாமல் உள்ளார்கள். அவர்களில் சிலர் சமூக வலைதளங்களில் இது குறித்த கேள்வியையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளார்கள்.
அவற்றிற்குத் தீர்வாக, தயாரிப்பு நிறுவனம் ஒரு முடிவை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். 'ஜனநாயகன்' வருவதை வைத்தும் மற்ற சில படங்களின் வெளியீட்டுத் தேதிகளை முடிவு செய்தாக வேண்டும் என்ற நிலை உள்ளது.
சிறிய படங்களுக்குத் தியேட்டர்கள் கிடைப்பதில்லை, வெளியிட உகந்த நாட்கள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் கடந்த சில வருடங்களாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகுதான் 'ஜனநாயகன்' என்றால் கிடைக்கும் தேதிகளில் அவர்கள் படங்களை வெளியிடுவார்கள்.
'ஜனநாயகன்' தயாரிப்பு நிறுவனமான கர்நாடகாவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அவர்களது பல கோடி வியாபாரமான 'டாக்சிக்' படம் மீதுதான் தற்போது அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. அடுத்த மாதம் மார்ச் 19ம் தேதி அப்படம் வெளியாக உள்ளது. தெலுங்கு உரிமை 120 கோடி, வெளிநாட்டு உரிமை 100 கோடி என பல நூறு கோடி வியாபாரத்தைப் பேசி வருகிறார்கள். அதனால், அவர்கள் தொடர் சிக்கலில் இருக்கும் 'ஜனநாயகன்' மீது உரிய கவனம் செலுத்துவார்களா என்பதும் தெரியவில்லை.
விஜய்யின் அரசியல் ஈடுபாடுதான் 'ஜனநாயகன்' சிக்கலுக்குக் காரணம் என அவர்கள் நினைக்கலாம். விஜய்யின் மேனேஜர் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளர் என்பதால் இரு தரப்பும் பேசி ஏதோ ஒரு முடிவு எடுத்திருப்பார்கள் என்பது நிச்சயமாக நடந்திருக்கும். அதை சீக்கிரத்தில் சொல்ல வேண்டும் என்பதுதான் திரையுலகினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.




