Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே மாதத்திற்கு முன்பு வரை ‛ஜனநாயகன்' வெளிவர வாய்ப்பில்லையாம்

16 பிப், 2026 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Jananayagan-not-release-until-May-before
Advertisement

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 'ஜனநாயகன்' படத்தின் ரிலீஸ் குறித்து புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை வினோத் இயக்கியுள்ளார். விஜயுடன் பாபி தியோல், பூஜா ஹெக்டே நடித்துள்ளனர். முதலில் இந்த படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கல்கள், அது தொடர்பான வழக்குகள் காரணமாக வெளியீடு தள்ளிப்போனது.

என்றாலும் தற்போது வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு தணிக்கை சான்றிதழ் வழங்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் படம் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வரை வெளியீடு சாத்தியமில்லை என்று கனடா விநியோக நிறுவனமான 'யார்க் சினிமாஸ்' அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் தனது எக்ஸ் பதிவில் "ஏப்ரல் 30க்கு முன்பு 'ஜனநாயகன்' வெளியாகாது. முன்பதிவு செய்தவர்களில் யாருக்காவது பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால், தியேட்டர்களை தொடர்பு கொள்ளலாம். புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதும் மெம்பர்ஷிப் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால் ஜனநாயகன் படம் அரசியல் படம் என்பதால் அது வெளியாக தேர்தல் கமிஷன் அனுமதிக்காது என்று கூறப்படுகிறது. இதனாலேயே படம் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தான் வெளிவரும் என்று தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் காலமானார்தயாரிப்பாளர், இயக்குனர் தமிழழகன் ... 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? நாகார்ஜுனா பதில் 'துரந்தர்' படத்தை மிஸ் பண்ணினேனா ? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

angbu ganesh - chennai,இந்தியா
16 பிப், 2026 - 12:02 Report Abuse
angbu ganesh இனி வந்தா என்ன வராட்டி என்ன
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap