‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு | இருமனம் ஒருமனமான தருணம்... : 2025ல் கெட்டிமேளம் கொட்டிய திரைப்பிரபலங்கள்...! | பிளாஷ்பேக்: புதுமுகங்களின் அணிவகுப்பில் புதுமை படைத்த “பொண்ணுக்கு தங்க மனசு” | பான் இந்தியா அளவில் முன்னேறிச் சென்றது தனுஷ் மட்டுமே… | ராதிகா சரத்குமார் கொடுத்த கிறிஸ்துமஸ் 'லன்ச்' விருந்து | தள்ளிப் போகிறதா 'பராசக்தி' தெலுங்கு ரிலீஸ்? | நிலத்தில் உழவு செய்த சல்மான் கான், தோனி |

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழிலும் 'பீஸ்ட், குட் பேட் அக்லி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இவர் தனது தந்தை மற்றும் குடும்பத்தினருடன் எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருக்கு தனது சிகிச்சைக்காக காரில் பயணித்தார். அதிகாலையில் தர்மபுரி அருகே ஒரு லாரியின் பின்னால் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் திருச்சூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று (ஜூன்-9) ஷைன் டாம் சாக்கோவின் தந்தையின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மருத்துவமனையில் இருந்து ஷைன் டாம் சாக்கோவும் அவரது அம்மாவும் அழைத்து வரப்பட்டனர். கையில் அடிபட்டிருந்த நிலையில் சாக்கோவாவது ஓரளவுக்கு சமாளித்து நடந்து வந்தார். ஆனால் கால்களில் அடிபட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது தாய் படுத்த படுக்கையாக ஸ்ட்ரெச்சரில் தான் அழைத்துவரப்பட்டார்.
இதில் கொடுமை என்னவென்றால் தனது கணவன் இறந்த செய்தி நேற்று காலை வரை அவருக்கு சொல்லப்படாமலேயே இருந்தது. அதன்பிறகு அவரிடம் பக்குவமாக விஷயத்தை சொல்லி மருத்துவமனையில் இருந்து அழைத்து வரப்பட்டார்.. இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்த தனது தந்தையின் உடலை பார்த்து ஷைன் டாம் சாக்கோ கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைப்பதாக இருந்தது.
கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை, நடிகையின் புகார், கைது, போதை மீட்பு மைய சிகிச்சை என தொடர்ந்து சோதனைகளை சந்தித்து வரும் ஷைன் டாம் சாக்கோவிற்கு இந்த சூழலில் அவரது தந்தையின் மரணம் மிகப்பெரிய இழப்பு என்று சொல்லலாம்.