வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
விஷால் நடித்து வெளிவந்த 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. 2018ல் தனுஸ்ரீ, பிரபல ஹிந்தி நடிகரான நானா படேகர் மீது 'மீடூ' புகார் அளித்தார். மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றாக அது இருந்தது. அதன்பின் நடந்த விசாரணையில், தீங்கிழைக்கும் நோக்கத்துடன், பழிவாங்கும் உணர்வால் தனுஸ்ரீ அந்தப் புகாரைத் தெரிவித்திருக்கலாம் என மும்பை, ஓஷிவரா காவல் நிலைய அறிக்கை தெரிவித்தது.
இந்நிலையில், தனுஸ்ரீ அவரது இன்ஸ்டா தளத்தில் அழுது கொண்டே பேசிய வீடியோ ஒன்று தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“என் வீட்டில் வினோதமான சத்தங்களை எதிர்கொண்டு வருகிறேன். 2020ம் ஆண்டு முதல் தினமும் வித்தியாசமான நேரங்களில் என் வீட்டின் மேலேயும், கதவுக்கு வெளியேயும் வினோதமான உரத்த சத்தங்களை அனுபவித்து வருகிறேன். கட்டிட மேலாண்மைக்கு புகார் செய்து சோர்வடைந்து, சில ஆண்டுங்களுக்கு முன்பு அதை விட்டுவிட்டேன்.
இப்போது நான் அதனுடன் வாழ்ந்து, என் மனதை திசை திருப்பி மனநிலையை பாதுகாக்க இந்து மந்திரங்கள் இசையுடன் கூடிய ஹெட்போன்களை அணிகிறேன். இன்று நான் மிகவும் உடல்நலமில்லாமல் இருந்தேன். கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் எதிர்கொள்வதால் நான் நாள்பட்ட சோர்வு நோய்க்குறி (Chronic Fatigue Syndrome) உருவாகியுள்ளது. இன்றும் அது நீண்டநேரம் நீடித்தது” என்று அந்த சத்தங்களைப் பகிர்ந்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு வீடியோவில், “சொந்த வீட்டிலேயே எனக்கு கொடுமை நடக்கிறது. இந்த தொல்லையால் நான் மனமுடைந்து விட்டேன். 2018ல் ‛மீ டூ' புகார் முதல் இது நடந்து கொண்டிருக்கிறது. வெறுப்படைந்து நான் காவல்துறையை அழைத்தேன். தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்கள் ! தாமதமாகும் முன் ஏதாவது செய்யுங்கள்” என்று கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.