குப்பைக் கிடங்கில் இருந்த நேரம்: 'குபேரா' அனுபவம் பற்றி தனுஷ் | 24 மணி நேர சாதனை : டாப் 5ல் இடம் பிடித்த 'அகாண்டா 2' டீசர் | 'தக் லைப்' படத்தில் இடம் பெற்ற 'அமானுஷ்யன்' நாவலின் சில பகுதிகள் | 'அகண்டா 2' படத்தில் வில்லனாக ஆதி | காஞ்சனா 4 படத்தின் நிலவரம் என்ன? | மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்! | சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | அதிர்ச்சி கொடுத்த 'தக்லைப்' படத்தின் ஐந்தாவது நாள் வசூல்! | தமன்னா நடிக்கும் 'விவான்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது! | வனிதா விஜயகுமாரின் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்! |
கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் 'தக் லைப்'. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ரசிகர்களை ஏமாற்றியுள்ளது. பட வெளியீட்டிற்கு முன்பாக இப்படத்தை ஓடிடி தளத்தில் எட்டு வாரங்களுக்குக் பிறகே வெளியிட உள்ளோம் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டர்களில் இந்த வாரம் வரையில் தாக்குப் பிடிக்குமா என்பதே சந்தேகம் என கூறுகிறார்கள். நான்கு வாரங்களுக்குப் பிறகு வெளியிட அனுமதி அளித்தால் ஓடிடி நிறுவனம் கூடுதலாக பணம் தர முன் வரலாம். அந்தத் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை தியேட்டர்காரர்கள் நஷ்டம் என கேட்டால் கூட கொடுத்துவிட வாய்ப்புள்ளது.
இப்படி சில பல தகவல்கள் படத்தைப் பற்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இது உண்மையா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.