கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ என்று நேற்று சில போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. அதை பார்த்த பலருக்கு இது அஜித்தா என அதிர்ச்சி. காரணம், அதில் ஷார்ட்டாக முடிவெட்டி, சற்றே வயதான தோற்றத்துக்கு மாறியிருந்தார் அஜித். அவரின் ரசிகர்கள் பலருக்கே அந்த தோற்றம் பிடிக்கவில்லை. இப்போதைக்கு படப்பிடிப்பு இல்லை. கார் ரேசில் மட்டுமே அவர் கவனம் செலுத்துகிறார். அதனால், அவர் இமேஜ் பற்றி கவலைப்படாமல் இந்த தோற்றத்துக்கு மாறியிருக்கிறார். தவிர, யாரும் தன்னை போட்டோ எடுத்துவிடக்கூடாது என்று அஜித் கவலைப்படுவது இல்லை.
தமிழ் நடிகர்களில் மாதத்துக்கு பல ரசிகர்களுடன் போட்டோ எடுப்பவர் அஜித்தான். அந்த போட்டோ பப்ளிக், சில நிகழ்ச்சிகள் அல்லது அஜித் செல்லும் இடங்களில் எடுக்கப்படும். அந்தவகையில் நேற்றைய போட்டோவும் வெளியாகி உள்ளது. சில ஆங்கிளில் அஜித்தை அந்த போட்டோக்கள் மிகவும் வயதானவராக காண்பிக்கிறது. இப்படிப்பட்ட தோற்றத்துக்கு மாறக்கூடாது. கார் ரேஸ் மாதிரியே தனது உடல் மீதும், கெட் அப் மீதும் அக்கறை கொள்ள வேண்டும். ஒரு நடிகனுக்கு முதல் முதலீடு அவர் உடல், ஆரோக்கியம் தான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.