டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான தெலுங்குத் திரைப்படம் 'கேம் சேஞ்ஜர்'. ஒரு பான் இந்தியா படமாக பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம் தோல்வியைத் தழுவியது.
சுமார் 400 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட படம், 100 கோடிக்கும் சற்றே கூடுதலான வசூலை மட்டுமே தந்தது என்றார்கள். ஷங்கர் இயக்கத்தில் ஒரு படம் இப்படி ஒரு தோல்வியை சந்தித்தது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ராம் சரண் நடித்து அதற்கு முன்பு வெளிவந்த 'ஆர்ஆர்ஆர்' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்தப் படத்தை பெரிதும் நம்பிய ராம் சரண் பெரிய ஏமாற்றத்தையே சந்தித்தார்.
இந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு இயக்குனர் ஷங்கர், நாயகன் ராம் சரண் இருவருமே தயாரிப்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு எதுவுமே பேசவில்லை என படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஷிரிஷ் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.
'கேம் சேஞ்ஜர்' தோல்வி குறித்து அதில் முதலில் எடிட்டராகப் பணியாற்றிய மலையாள எடிட்டர் ஷமீர் முகம்மது, படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு ஆகியோர் கொடுத்த பேட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராம் சரண் தற்போது 'பெத்தி' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் தனது அடுத்த படம் குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.