மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கு திரையுலகில் அடியெடுத்து வைத்து நடித்த படம் வாரிசு. கடந்த பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியான இந்த படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கியிருந்தார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். பட ரிலீஸுக்கு முன்பாக இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தில் ராஜு விஜய் தான் சூப்பர்ஸ்டார் என்பது போல பேசி ஒரு பரபரப்பையும் சர்ச்சையையும் தமிழ் திரையுலகில் ஏற்படுத்தினார்.
அதேபோல இந்த படத்தில் சாங்ஸ் இருக்கு, டான்ஸ் இருக்கு, பைட் இருக்கு என அவர் அந்த நிகழ்வில் பேசிய வார்த்தைகளும் பேசிய விதமும் அப்போது வைரலாக பரவின. இந்த நிலையில் தற்போது தெலுங்கில் உருவாகியுள்ள பாலகம் என்கிற படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தில் ராஜு அதேபாணியில் பேசிய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் அவர் பேசும்போது, “இந்த சினிமாவில் பைட் இல்லை.. இந்த சினிமாவில் டான்ஸ் இல்லை இந்த சினிமாவில் அந்த விஜய் சாரின் பாடி லாங்குவேஜ் இல்லை. ஆனால் இந்த சினிமாவில் சூப்பரான பொழுதுபோக்கு இருக்கு.. சூப்பர் எமோஷன் இருக்கு.. சூப்பர் தெலுங்கானா நேட்டிவிட்டி இருக்கு” என்று பேசியுள்ளார்.
குறிப்பாக வாரிசு படத்தில் விஜய்யின் பாடி லாங்குவேஜ் குறித்து அவர் பேசியதை பார்க்கும்போது, அவர் விஜய்யை கிண்டலடித்து கூறியுள்ளார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. வாரிசு படம் தில் ராஜுவுக்கு லாபத்தை கொடுக்கவில்லை என்பதாலும் மீண்டும் தெலுங்கு ஹீரோக்களின் மனதில் இடம் பிடிக்கவேண்டும் என்பதாலும் தில் ராஜு இப்படி பேசியுள்ளார் என்றே சொல்லப்படுகிறது.
இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. வாரிசு படத்திற்கு முன்பு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்பது போன்று அவர் பேசியபோது அவரை புகழ்ந்து தள்ளிய விஜய் ரசிகர்கள் தற்போது தில் ராஜுவின் இந்த பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.