60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் |

சேகர் கம்முலா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் 'குபேரா'. தமிழ், தெலுங்கில் தயாராகி ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் ஆகி வெளியானது.
தமிழில் மிகச் சுமாரான வசூலையும், தெலுங்கில் நல்ல வசூலையும் கொடுத்து ஆச்சரியப்படுத்தியது. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து குறைந்த லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது. தமிழிலும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தால் லாபம் அதிகமாக இருந்திருக்கும்.
இப்படம் அடுத்த வாரம் ஜூலை 18ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என அமேசான் பிரைம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் இடம் பெற உள்ளது.
தியேட்டர்களில் வரவேற்பைப் பெறாத சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகும் போது நல்ல வரவேற்பைப் பெறுவதுண்டு. அப்படி இந்த 'குபேரா' படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.