தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாளத்தில் கவனிக்கத்தக்க கதாபாத்திரங்களில் நடித்தும் சின்ன சின்ன படங்களில் ஹீரோவாகவும் நடித்தும் பிரபலமானவர் நடிகர் மணிக்குட்டன். தமிழில் உதயநிதி நடித்த ‛நிமிர்' படத்தில் பார்வதி நாயரின் கணவராக நடித்தவர் இவர்தான். கடந்த 2005ல் இயக்குனர் வினயன் இயக்கத்தில் வெளியான ‛பாய் பிரண்ட்' என்கிற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஹனி ரோஸ். இவரும் அந்த படத்தில் தான் அறிமுகமானார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை ஹனி ரோஸ் குறித்து மணிக்குட்டன் பேசும்போது, “நாங்கள் இருவரும் ஒரே படத்தில் தான் அறிமுகமானோம். அவருடன் இப்போதும் நல்ல நட்பில் இருக்கிறேன். 20 வருடங்கள் ஆன பிறகு தற்போதும் நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் எவர்கிரீன் பேச்சுலர்ஸ் ஆகவே இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
எதற்காக இப்படி ஒரு விஷயத்தை அந்த பேட்டியின் போது கூறினார் என அவருக்கே வெளிச்சம். ஆச்சரியமாக அந்த படத்தில் நடித்த இன்னொரு சீனியர் கதாநாயகியான லட்சுமி கோபால்சாமியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தான் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.