பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் | தலைவன் தலைவி 50 கோடி வசூல் என அறிவிப்பு | யு டியூப் ரிலீஸ் : அமீர்கான் வழியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா ? |
கடந்த வருடம் மலையாளத்தில் சிறிய பட்ஜெட்டில் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் பொடுவால் இயக்கியிருந்தார். இவரை தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலரும் நேரில் அழைத்து பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து அவர் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது புதிய படத்தை இயக்க தயாராகிவிட்டார் சிதம்பரம். இந்த படத்தின் கதையை கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் ஆவேசம் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஜித்து மாதவன் தான் எழுதி இருக்கிறார். இன்னொரு பக்கம் இதே ஜித்து மாதவன் தற்போது மோகன்லாலை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கத் தயாராகி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.