சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2003ல் வெளிவந்த 'பாய்ஸ்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் தமிழில் தான் முதலில் அறிமுகம் என்றாலும் தெலுங்கில் அதிகப் படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் 'பாய்ஸ், சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம்' ஆகிய படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஹிந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரண்டு மகன்களுக்கு அம்மாவானார் ஜெனிலியா. கடந்த 15 வருடங்களில் வருடத்திற்கு ஒரு சில படங்களில் மட்டும் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் அமீர்கானுடன் நடித்த 'சிதாரே ஜமீன் பர்' ஹிந்திப் படம் வெளியானது. அடுத்து தெலுங்கு, கன்னடத்தில் உருவாகியுள்ள 'ஜுனியர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசுகையில், “நல்ல கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன். படம் முழுவதும் இடம் பெறும் கதாபாத்திரம் கூட தேவையில்லை. ஆனால், மனதில் நிற்கக் கூடிய கதாபாத்திரங்கள் வேண்டும், அது சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் பரவாயில்லை, அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அப்படி இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்,” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜெனிலியாவுக்கென இங்குள்ள இயக்குனர்கள் யாராவது அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை வைத்திருப்பார்களா ?. இருந்தால் மீண்டும் ஜெனிலியாவை தமிழ்ப் படங்களிலும் பார்க்கலாம்.