படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

‛ஆஷ்ரம்' வெப்சீரிஸ் புகழ் நடிகை திரிதா சவுத்ரி தற்போது படங்களிலும் பிஸியாக நடிக்கிறார். அவர் நடித்துள்ள சஸ்பென்ஸ், திரில்லர் படமான ‛சோ லாங் வேலி', ஜூலை 25ல் தியேட்டர்களில் வெளியாகிறது. இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மான் சிங் இயக்கி உள்ளார். இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் தீவிராக உள்ளார். அவர் அளித்த பேட்டி...
போலீஸாக நடித்தது பற்றி அவர் கூறுகையில், ‛‛போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த பிறகு போலீஸ் மீதான மரியாதை இன்னும் அதிகரித்துள்ளது. ஏனெனில் அவர்கள் அனைவரும் நமக்காகவும், சமூகத்திற்காகவும் நிறைய உழைக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை எளிதானது அல்ல. அவர்கள் குடும்பத்துடன் அதிகநேரம் செலவிட முடிவது இல்லை. தங்களது கடமைக்காக நிஜ வாழ்க்கையில் நிறைய சமரசங்களை அவர்கள் செய்ய வேண்டி உள்ளது''.
பெண் போலீஸ் படம் குறித்து அவர் கூறும்போது, ‛‛நான் சமீபத்தில் கஜோலின் தோ பட்டி படம் பார்த்தேன், மிகவும் பிடித்திருந்தது. அதில் தனக்கு வரும் வழக்குகளை அவர் சிறப்பான முறையில் தீர்த்து வைத்தார்''.
'ஆஷ்ரம்' புகழ் நடிகை என்று அழைப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த திரிதா, ‛‛இதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு மட்டுமல்ல, இதுபோன்று பல நடிகர்களுக்கும் நடக்கிறது. இதுதான் மக்களின் அன்பு என்று உணர்கிறேன். வரும் காலங்களில் வேறு படங்கள் அல்லது தொடர்களில் நடித்தால் அந்த படங்கள் அல்லது தொடரின் பெயரை குறிப்பிட்டு என்னை அழைக்கலாம் அல்லது அடையாளம் காணலாம் என்று நம்புகிறேன்''.
இவ்வாறு திரிதா கூறினார்.




