பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
கடவுள், நாளைய மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய வேலு பிரபாகரன், 68 உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். கடந்த மாதம் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் பத்து நாட்களாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(ஜூலை 18) காலை 5.30 மணிக்கு காலமானார்.
1989ம் ஆண்டு வெளியான ‛நாளைய மனிதன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வேலு பிரபாகரன். அதனை தொடர்ந்து சத்யராஜ் நடித்த ‛பிக்பாக்கெட்', மோகன் நடித்த ‛உருவம்', பிரபுவின் ‛உத்தமராசா' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னர் ‛புதிய ஆட்சி, அசுரன், கடவுள், புரட்சிக்காரன்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். அதன்பின் ‛காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி' என படங்களை இயக்கினார். கஜானா, வெப்பன், ஜாங்கோ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
பி ஜெயாதேவி என்பவரை முதன்முதலில் திருமணம் செய்த வேலு பிரபாகரன், அதன்பின்னர் 2017ல் தன் 60வது வயதில் தன்னை விட 25 வயது குறைவான நடிகை ஷிர்லே தாஸ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷிர்லே தாஸ், வேலு பிரபாகரன் உடன் 'காதல் கதை' என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது மலர்ந்த காதலை அடுத்து 60வது வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இது அப்போது பேசுபொருள் ஆனது.
சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஞாயிறு அன்று இறுதிச்சடங்கு நடக்கிறது.