பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் என பன்முகம் கொண்ட பார்த்திபன் சின்னத்திரையில் கால் பதிக்கிறார். இதற்கு முன் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் இப்போது ஒரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். அடுத்து தொகுப்பாளராக களம் இறங்குகிறார்.
தென்னிந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளைக் கண்டறியும் 'பிட்ச் இட் ஆன் - நீங்களும் ஆகலாம் கலாம்' என்ற நிகழ்ச்சியை செப்டம்பர் - நவம்பர் மாதங்களில் ஸ்டார் விஜய் சேனலில் தொகுத்து வழங்க இருக்கிறார்.
இதுகுறித்து பார்த்திபன் கூறுகையில், ''பொதுவாக கொலை குற்றங்களை செய்ய உடந்தையாக இருப்பவர்களுக்கு அதிக தண்டனை. அதேபோல் நல்லது செய்யத் தூண்டுபவர்களுக்கு புண்ணியம் அதிகம். அந்தவகையில் அதிக புண்ணியம் எனக்கு கிடைக்கும் என்பதால் தான் இதற்கு ஒத்துக் கொண்டேன்.
அப்துல் கலாமுக்கும் எனக்கும் இடையே நிறைய உணர்வுப்பூர்வமான அன்பு இருக்கிறது. நடிகர் விவேக்கை அதிகம் 'மிஸ்' செய்கிறேன். ஒருவேளை விவேக் உயிருடன் இருந்திருந்தால், இந்த நிகழ்ச்சியை அவரைத்தான் செய்ய சொல்லியிருப்பேன்.
சினிமாவே ஒரு மிகப்பெரிய அறிவியல் அதிசயம் தான். அதில் சாதிக்க நினைத்து பல இளைஞர்கள் தவம் கிடக்கிறார்கள். எனக்கு அறிவியல் பெரிதாக தெரியாது. ஆனால் அறிவியல் உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்'' என்றார்.