விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‛ஜெய் பீம், வேட்டையன்' ஆகிய படங்களை இயக்கிய தா.சே. ஞானவேல், மலையாள நடிகர் மோகன்லாலிடம் 'தோசை கிங்' என்கிற படத்திற்காக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கைகூடவில்லை. தற்போது மீண்டும் இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கி இறுதிகட்ட நிலையில் உள்ளது என மலையாள சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இப்படம் சரவணபவன் உணவகத்தின் நிறுவனர் ராஜகோபால் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகிறது. இதில் குறிப்பாக ராஜகோபால், ஜீவா ஜோதி இருவர்கிடையே இருந்த மோதல் இதனால் ராஜகோபால் சிறை சென்றது வரை என பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்த படத்தில் இடம்பெறும் என்கிறார்கள். ஜங்லி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கான திரைக்கதையை தா.சே. ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் என இருவரும் இணைந்து எழுதியுள்ளனர்.