2025 : மொழி மாறி இயக்கி தோல்வியடைந்த இயக்குனர்கள் | நடிகைகளின் ஆடைகள் பற்றிப் பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவாஜி | 2025ல் ஹாட்ரிக் வெற்றியை 'மிஸ்' செய்த பிரதீப் ரங்கநாதன் | 2025ல் நம்பர் 1 வசூல் - 'காந்தாரா சாப்டர் 1'ஐ முந்திய 'துரந்தர்' | 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்... தெலுங்கில் பின் வாங்கிய வினியோகஸ்தர்? | முன்கூட்டியே ஜன., 10ல் ‛பராசக்தி' ரிலீஸ் : விஜய் படத்துடன் நேரடியாக மோதும் சிவகார்த்திகேயன் | சத்ய சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் ‛அனந்தா' : அடுத்தமாதம் ஓடிடியில் வெளியீடு | 'ரேஸ் நடிப்பு அல்ல.. ரியல்' : அஜித்தின் புதிய வீடியோ வைரல் | ஹிந்தியில் திரிஷ்யம் 3 ரிலீஸ் தேதியை அறிவித்த அஜய் தேவ்கன் | முதல் படம் வெளியாகும் முன்பே சிறை இயக்குனருக்கு கார் பரிசு |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் சில வெப் தொடர்களிலும் நடித்துள்ளார். 'லீதா, எஸ்கேப் லைப்' உள்ளிட்ட தொடர்களில் நடித்த அவர் தமிழில் 'நவராசா' என்ற வெப் தொடரை தயாரித்து நடித்தார்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் வெப் தொடரில் நடிக்கிறார்.
'அன்கஸ்டமைஸ்டு எர்த்' (பழக்கமற்ற பூமி) என்பது வெப் தொடரின் டைட்டில். புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஜும்பா லஹிரியின் நாவலை அடிப்படையாக கொண்ட தொடர்.
எட்டு எபிசோடுகளைக் கொண்ட இந்த தொடர் ரொமாண்டிக் கதை கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது. ரித்தேஷ் பத்ரா இயக்குகிறார். பிரிடா பின்டோ நாயகியாக நடிக்கிறார். ஜான் வெல்ஸ் புரொடக்ஷன்ஸ், வார்னர் பிரதர்ஸ் டெலிவிஷனுடன் இணைந்து தயாரிக்கிறது.