முதல்வர் விஜய் தொடங்கிவைத்த போட்டி: அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? | 12 ஆண்டுகால 'திரிஷ்யம்' பயணம் குறித்து அபிஷேக் பதக் நெகிழ்ச்சி! | லோகேஷ் கனகராஜ் படத்தை கைவிட்ட அமீர்கான்: மற்றொரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்கிறார்! | பூமியிலிருந்து வேற்று கிரகத்திற்கு செல்ல வழி என்ன? இயக்குனர் கிருத்திகா உதயநிதி போட்ட பதிவு! | 'மயோசிடிஸ்' நோய் கற்றுத்தந்த பாடம்: சமந்தா | 'கிளாடியேட்டர்ஸ்' படத்தில் நடிக்கிறாரா விஜய் | விஜய் ரசிகராக நடிக்கும் முன்னாள் திமுக எம்எல்ஏ | தம்பியை கலாய்த்தார், சிவாஜியை புகழ்ந்தார் இளையராஜா | பிளாஷ்பேக்: “மணமகள்” திரைப்படம் தந்த மதிப்பிற்குரிய அறிமுகங்களும், மகத்தான மாற்றங்களும் | மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய நடிகர்கள்: 5 ஆபத்தான ஷூட்டிங் விபத்துகள் |

'டாடா' படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு தயாரிக்கும் படம் 'ப்ளடி பாலிட்டிக்ஸ்'. கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாகவும், அஞ்சனா நேத்ருன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் செல்வராகவன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ரோபி, பி.வாசு, ஏ.வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தீனா ராகவன் இயக்கி உள்ளார். இதன் வசனங்களை இயக்குனர் ராஜு முருகன் எழுதியுள்ளார். பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்கிறார். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.
படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நடந்த, நடக்கும் கொடிகம்ப அரசியல் பற்றி படம் பேசுகிறது. தலைநகரில் கோட்டையை பிடிப்பது சாதனை போன்று உள்ளூரில் உயரமான கொடி கம்பங்களை நடுவதுதான் அரசியல்கட்சியின் சாதனை. இந்த கொடி கம்பங்கள், தயாரிப்பு, நிறுவதல், வீழ்த்துதல் போன்ற அரசியலை மையமாக கொண்டு படம் தயாராகி உள்ளது. திமுக முதல் தவெக வரை அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகம்பங்களை நையாண்டியும், ஆக்ஷனும் கலந்து சொல்லும் படமாக தயாராகி வருகிறது.