Advertisement

சிறப்புச்செய்திகள்

லண்டன் கார் ரேஸை துவக்கி வைத்த முதல்வர் விஜய் : ஆரத்தழுவி வரவேற்ற நடிகர் அஜித் | அரசியல் கதையில் கவுதம் ராம் கார்த்திக் | 2026 : கேரளாவில் நம்பர் 1 வசூல் இடத்தைப் பிடித்த 'பெத்லகேம் குடும்ப யூனிட்' | தொடர்ச்சியாக வெளியீடுகளுக்குத் தயாராகும் தமிழ் சினிமா | ‛சேயோன்' 2ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு | அதிர்ச்சி கொடுத்த அக்ஷய் குமாரின் ஹைவான் | ஓடிடி தர வரிசையில் 5வது இடம் பிடித்த மாதவனின் ஜிடிஎன் | ஒரே நாளில் மோதும் நாகார்ஜுனா, பால கிருஷ்ணா படங்கள் | விஸ்வாம்பரா வெளியீட்டுப் பிரச்னையை தீர்க்க சிரஞ்சீவியை அணுகிய தயாரிப்பாளர்கள் | செப்டம்பர் 18-ல் தெலுங்கில் வெளியாகும் ஹனுமான் அன்ஷ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அதிர்ச்சி கொடுத்த அக்ஷய் குமாரின் ஹைவான்

12 செப், 2026 - 05:24 IST
எழுத்தின் அளவு:
Akshay-Kumars-hawan
Advertisement

ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் நேற்று திரைக்கு வந்துள்ள படம் ஹைவான். குற்றப்பின்னணி கொண்ட திரில்லர் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் அக்ஷய் குமார் நாயகனாக நடித்துள்ளார். சைப் அலிகானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக, அக்ஷய் குமாரின் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இப்படம் முதல் நாளில் ரூ. 7 கோடி முதல் ரூ. 8 கோடி வரை வசூலிக்கும் என்று கணித்திருந்தனர். ஆனால், இப்படம் முதல் நாளில் வெறும் ரூ. 3 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஒரு முன்னணி நடிகருக்கு இது மோசமான தொடக்கம் என்பதில் சந்தேகமில்லை.

இந்த அளவிற்கு ஹைவான் படம் நிராகரிக்கப்பட்டதற்கு முதன்மையான காரணம், இது ஒரு ரீமேக் படம் ஆகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஒப்பம் என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்தான் இந்த ஹைவான். மேலும், அக்ஷய் குமாருக்கு இந்த ஆண்டின் தொடக்கம் நன்றாகவே அமைந்தது. பூத் பங்களா படம் சூப்பர் ஹிட்டாக அமைந்ததுடன், வெல்கம் டு தி ஜங்கிள் படமும் நல்ல வசூலை கொடுத்தது. ஆனால், ஹைவான் படத்தின் மூலம் அவருக்கு ஒரு சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'திரிஷ்யம் : தி கன்க்ளூஷன்' டிரைலர் வெளியானது'திரிஷ்யம் : தி கன்க்ளூஷன்' டிரைலர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film
    • நடிகர் : ஏ.கிருஷ்ணா
    • நடிகை : ஆராத்யா
    • இயக்குனர் :M.B.ராஜதுரை
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap