காப்பிரைட் உத்தரவை மீறும் இளையராஜா மீது சரிகம வழக்கு : டில்லி ஐகோர்ட் நோட்டீஸ் | செலவு சிறுசு.... வரவு பெருசு... : வசூலை வாரிக் குவிக்கும் "ஹனுமான் அன்ஷ்" | விநோத உலகத்தை அறிமுகப்படுத்தும் “ட்ரோன்ஸ்” | ஓடிடி ரசிகர்களுக்கு ட்ரீட்: ஆவலுடன் எதிர்பார்த்த படங்கள் வெளியீடு..! | 80களில் இந்த திரைப்பிரபலங்கள் எப்படி இருந்திருப்பார்கள்...!! | 'ஓடிடி'க்காக மறு எடிட் செய்யப்படும் 'டாக்சிக்' | 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'ஜாக்பாட்' நிகழ்ச்சி | விற்பனை பிரதிநிதிகளின் வாழ்க்கையை பேசும் 'கோல்டு கால்' | ‛பத்தா' படம்... 'மகளே' பாடல் வெளியீடு : அப்பாமகள் பாசம் கதையா? | 'சிக்மா' டைட்டிலுக்கு விளக்கம் சொன்ன ஜேசன் சஞ்சய் |

உ.பி.யை சேர்ந்த நீம் கரோலி பாபாவின் போதனைகளை அடிப்படையாக கொண்டு ஹிந்தியில் ஆகஸ்ட் மாதம் வெளியான படம் "ஹனுமான் அன்ஷ்". விஷால் சதுர்வேதி இயக்க, பாபா வேடத்தில் ஷோபினா சத்யா நடித்திருந்தார். மவுத் டாக் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமான இப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் 2 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இப்போது 180 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. இந்தியா தாண்டி இப்படம் அடுத்து வெளிநாடுகளிலும் வெளியாகிறது. அப்படி வெளியாகும் போது இதன் வசூல் இன்னும் பல கோடிகளை தாண்ட வாய்ப்புள்ளது.
ஒருபக்கம் சினிமாவில் 100 கோடி, 200 கோடி, 500 கோடி போன்ற பட்ஜெட்டில் பிரமாண்ட படங்கள் தயாரிக்கிறேன் என போட்ட பட்ஜெட் காசைக் கூட எடுக்க முடியாமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனர். மற்றொருபுறம் இதுபோன்ற சில கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டு கோடி, கோடியாக வசூலைக் வாரி குவித்து கொண்டிருக்கிறது.