'வாரணாசி' படம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்த பிரித்விராஜ் சுகுமாரன்! | சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஓடிடி தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது! | சிரஞ்சீவியின் 'விஸ்வாம்பரா' ஓடிடி ஒப்பந்தம் முடிந்தது! விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு! | பிளாஷ்பேக்: அடிதடி நாயகன் ரஜினியை, அமைதி நாயகனாய் காட்டிய “ஆறிலிருந்து அறுபதுவரை” | உடை பற்றிய விமர்சனம்: ஐஸ்வர்யா லக்ஷ்மி காட்டம் | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் 'ஜாக்கி - நோ ரீடேக்ஸ் அலவுட்' | துல்கர் சல்மான், நயன்தாரா பிடிக்கும்: வரலட்சுமி நிகழ்ச்சியில் பி.வி.சிந்து | ரசிகர்கள் கவனிக்கத் தவறிய தமிழ் சினிமாக்களின் 10 லாஜிக் தவறுகள்! | 'மூக்குத்தி அம்மன் 2' டீசர் வெளியீடு: நவ.6ல் படம் ரிலீஸ் | அஜித்துக்கு 'மினியேச்சர்' ரேஸ் கார் பரிசளித்த முதல்வர் விஜய் |

நடிகை சமந்தா, சில ஆண்டுகளுக்கு முன்பு 'மயோசிடிஸ்' எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதிலிருந்து மீண்டு வந்த அவர் பின்னர் படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவரை திருமணம் செய்தார். தற்போது கர்ப்பமாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் பாதித்த மயோசிடிஸ் நோய் குறித்து பகிர்ந்துள்ளார்.
சமந்தா கூறியதாவது: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது, என் அடையாளத்தை நான் இழந்துவிட்டது போல் உணர்ந்தேன். எனது கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற எண்ணம் தோன்றியது. மன உறுதி, நம்பிக்கை, எதிர்பார்ப்பு போன்ற முக்கியமான குணங்களை இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்தது. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்க வேண்டும்? என்ற கட்டத்தைத் தாண்டி, இதிலிருந்து நான் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று உள்ளது என்பதை உணர சிறிது காலம் ஆனது. இந்த நோய் எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்கள் என் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அங்கமாக மாறிவிட்டன. இவ்வாறு அவர் கூறினார்.