சூப்பர் நேச்சுரல் திரில்லர் பாணியில் ‛மண்டவெட்டி' | ரீ ரிலீஸ் ஆகிறது திரிஷா இல்லன்னா நயன்தாரா | 65 வசூலைக் கடந்த 'மண்டாடி' - அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சைமா அவார்ட்ஸ் 2026 : 6 விருதுகளை வென்ற ‛டூரிஸ்ட் பேமிலி' | 8வது வாரத்தில் ஹவுஸ்புல் ஆன 'ஜனநாயகன்' !!! | பிளாஷ்பேக்: நிஜ கலைஞர்கள் வழங்கிய நிழலோவியம் “நிழல் நிஜமாகிறது” | குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்ற சமந்தா வளைகாப்பு | 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் குஷ்பு இருக்கிறாரா? | ராஷ்மிகா நடிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி வாழ்க்கை வரலாறு படம்: நாளை துவக்கி வைக்கும் கமல் | விஜய் சேதுபதியின் பேச்சு : விஜய் டிவி விளக்கம் |

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து, உலகளவில் 260 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இந்த ஆண்டின் சூர்யாவின் இரண்டாவது சூப்பர் ஹிட் திரைப்படமாக உருவெடுத்துள்ளது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியானது.
இருப்பினும், இதன் ஓடிடி வெளியீட்டின்போது ஆரம்பத்தில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்பட்டன. குறிப்பாக ஒரு காட்சியில் லேயரிங் பிரச்னை மற்றும் டைட்டில் கார்டில் சிங்கம் படக் குறிப்பு விடுபட்டு வெறும் காலியான பக்கமாக தோன்றியது. இந்த தவறுகளைப் பார்த்த பார்வையாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தற்போது அந்தப் பிரச்சனைகள் சரிசெய்யப்பட்டு, ஓடிடி பதிப்பு சீராகக் கிடைக்கிறது.
இப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், நாசர், ராஜீவ் மேனன், சுதா, சுனில் ரெட்டி, ஹர்ஷா செமுடு மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.