டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா நடித்த 'வாழ்வே மாயம்' வெளியாகி வெள்ளி விழா கண்ட பிறகு அதே கதையை உல்டாவாக்கி ஆர்.சக்தி இயக்கிய படம் 'சந்தோஷ கனவுகள்'. 'சிறை' என்ற அற்புதமான படத்திற்கு பிறகு ஆர்.சி.சக்தி இயக்கிய மிகப்பெரிய தோல்விப் படம்.
விஜயகாந்த், நளினி, ராஜேஷ், தீபா, வி.எஸ்.ராகவன், வடிவுக்கரசி, தேங்காய் சீனிவாசன், சில்க் ஸ்மிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷியாம் இசை அமைத்திருந்தார்.
விஜயகாந்த் தனது அத்தை மகள் நளினியை உயிருக்கு உயிராக காதலிப்பார். ஆனால் அவருக்கு திடீரென ஒரு நோய் வருகிறது. அவரை பரிசோதித்த டாக்டர் இன்னும் சில நாளில் நீ செத்து விடுவாய் என்கிறார். இதனால் விஜயகாந்த் தான் காதலித்த அத்தை மகள் நளினியை தனது நண்பன் ராஜேசுக்கு திருமணம் செய்து வைப்பார்.
பின்னர்தான் தெரியும் டாக்டர் சொன்னது தவறான தகவல். அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. விஜயகாந்த் நடித்த படங்களில் மோசமான தோல்வியை சந்தித்த படம் இது.