டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், 'தீயவர் குலை நடுங்க' படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை கருவை மையப்படுத்தி உள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது.
இதில் முதன்முதலாக அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இருவரும் ஜோடி அல்ல. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாகும் இந்த படம் ஒரு எழுத்தாளர். அவர் எழுதும் கதை, கிரைம், போலீஸ் விசாரணை என்று செல்கிறது. இதில் சிவாஜி கணேசன் மகன் ராம்குமார், விஷால் அப்பா ஜி.கே.ரெட்டி, வேல.ராமமூர்த்தி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள்.