டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பராசக்தி'. அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ளது.
சுதா கொங்கராவின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார் தான் இந்தப் படத்திற்கும் இசை. சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி இப்படத்தின் கதை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் எக்ஸ் தளத்தில் தகவலை வெளியிட்டுள்ளார். படம் வெளியாக இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே படத்தின் புரமோஷன் வேலைகளை ஜிவி ஆரம்பித்து வைக்கிறார்.
ஜிவி பிரகாஷ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்த 'அமரன்' படம் இசை ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு படம். சுதா கொங்கரா - ஜிவி பிரகாஷ் கூட்டணி தேசிய விருதைப் பெற்ற ஒரு கூட்டணி. எனவே, 'பராசக்தி' பாடல்கள் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் உள்ளது.