டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தமிழ் சினிமாவில் இன்றைக்கு முன்னணியில் பல நடிகர்கள் கஷ்டப்பட்டு மேலே வந்தவர்கள்தான். லைட் பாய் ஆக, டிவி நிகழ்ச்சிகளில் சிறிய வேடங்களில் நடித்தவராக, சினிமாவில் ஓரிரு காட்சிகளில் தலை காட்டியவராக நடித்து பின் நகைச்சுவை நடிகராக உயர்ந்து, இன்றைக்கு நாயகனாகவும் உயர்ந்திருப்பவர் நடிகர் சூரி.
மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் என்ற ஊரில் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடும் வீடியோ ஒன்றை சூரி இரண்டு தினங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதற்கு ரசிகர் ஒருவர், “திண்ணைல கிடந்தவனுக்கு திட்டுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை.” என்று கிண்டலடித்து கமெண்ட் போட்டிருந்தார். அந்த நபருக்கு சரியான விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார் சூரி.
“திண்ணையில் இல்லை நண்பா, பல நாட்களும் இரவுகளும் ரோட்டில்தான் இருந்தவன் நான்… அந்த பாதைகள் தான் எனக்கு வாழ்க்கையின் உண்மையும் மதிப்பையும் கற்றுத் தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து முன்னேறினா, வெற்றி நிச்சயம் உன்னைத் தேடி வரும்,” என பதிலளித்துள்ளார்.
உழைப்பால் உயர்ந்த சிலரது உயர்வைப் பார்த்து பொறாமைப்படும் கூட்டம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது.