டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'பல்டி, டியூட்' படங்களை தொடர்ந்து 'கருப்பு, பென்ஸ், மார்சல்' போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் சாய் அபயங்கர். அதையடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்திற்கும் அவர் இசையமைப்பதாக செய்திகள் வெளியானபோதும் அதை படக்குழு இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், இன்று சாய் அபயங்கரின் பிறந்த நாள் என்பதால் அல்லு அர்ஜுன் தனது இணையப்பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில், 'என் சகோதரர் எஸ்ஏகேவுக்கு இது மகிழ்ச்சியான நாள். வரும் ஆண்டுகளில் உங்களுக்கு வெற்றி மற்றும் பெருமை கிடைக்க வாழ்த்துகிறேன்' என்று பதிவிட்டு இருக்கிறார் அல்லு அர்ஜுன்.
இதன்மூலம் அவரது 22வது படத்துக்கு சாய் அபயங்கர் இசை அமைப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்து வந்த நிலையில் தற்போது மிருணாள் தாக்கூரும் இணைந்திருக்கிறார்.