வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” |

சேரன் இயக்கி நடிக்க பரத்வாஜ் இசையமைக்க, மற்றும் சினேகா, மல்லிகா, கோபிகா உள்ளிட்ட பலர் நடிக்க 2004ம் ஆண்டில் வெளியாகி சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் 'ஆட்டோகிராப்'. அப்படத்தை அடுத்த வாரம் நவம்பர் 14ம் தேதி ரிரிலீஸ் செய்ய உள்ளார்கள்.
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேரன், சினேகா, சேரனின் முன்னாள் உதவி இயக்குனர்கள் இந்நாள் இயக்குனர்களான பாண்டிராஜ், ஜெகன், ராமகிருஷ்ணன், உள்ளிட்டவர்களும், படக்குழுவினர்களும் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய சேரனின் முன்னாள் உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் சில தகவல்களைச் சொன்னார். 'ஆட்டோகிராப்' படத்தில் முதலில் நாயகனாக நடிக்க விஜய்யிடம்தான் கதையைச் சொன்னார்களாம். ஆனால், அப்போது ஆக்ஷன் ஹீரோவாக வளர ஆரம்பித்திருந்த விஜய்யிடம் யாரோ சிலர் 'ஆட்டோகிராப்' படத்தில் நடித்தால் அவரை மாற்றிவிடுவார்கள் என பயமுறுத்தி இருக்கிறார்கள். அதனால், அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார். பின்னர் படம் வெளியாகி அந்தப் படத்தைப் பார்த்து நடிக்க மறுத்தது குறித்து மிகவும் வருத்தப்பட்டாராம். அதற்கடுத்து விஜய் - சேரன் கூட்டணியில் ஒரு படத்திற்காக அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு கடைசியில் அந்தப் படம் ஆரம்பமாகாமலேயே போய்விட்டது என்ற சில தகவல்களைச் சொன்னார்.
இந்தக் கால ரசிகர்களும் ரசிப்பதற்காக 'ஆட்டோகிராப்' படத்தின் நீளத்தை 15 நிமிடங்கள் குறைத்து, பின்னணி இசையிலும் சில மாற்றங்களைச் செய்து 4கே தரத்தில் நவ., 14ல் வெளியிட உள்ளார்கள்.