வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் சித்தி மகனும், ஜேசன் சஞ்சயின் சித்தப்பாவுமான நடிகர் விக்ராந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், ஜேசன் சஞ்சய் இயக்குனராகி இருப்பதை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அதோடு, அவர் வெளிநாட்டில் படித்து வரும்போதே அவரை ஹீரோவாக நடிக்க வைக்க பல நிறுவனங்களும், இயக்குனர்களும் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக நடிக்க விரும்பவில்லை . இயக்குனராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக தனது தந்தை பெரிய ஸ்டார் நடிகராக இருந்தபோதும் அவர் பெயரை பயன்படுத்தி தான் சினிமாவில் வளர வேண்டும் என்று அவர் விரும்பவில்லை. தனது தனித் திறமையால் சினிமாவில் வெற்றி பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அவரது இந்த எண்ணமும் முயற்சியுமே அவருக்கு கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் விக்ராந்த்.