சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி பட தயாரிப்பில் மாற்றம் | பிரம்மாண்ட புராண காவிய கதையில் அல்லு அர்ஜூன் | மலேசியாவில் குட்டி கதை சொல்வாரா விஜய் | மகனுக்காக போன் போடும் அப்பா : சிறை படத்தில் நடக்கும் சுவாரஸ்யம் | ரஜினியின் மூன்று முகம் ரீ ரிலீஸ் ஆகுது : ஆர்.எம்.வீரப்பன் மகன் தகவல் | ஜனநாயகன் படத்தின் ஹிந்தி தலைப்பு 'ஜன் நேட்டா' | சிக்மா படத்தின் டீசர் எப்படி இருக்கு | 60 நாட்களில் நிறைவு பெற்ற கென் கருணாஸ் பட படப்பிடிப்பு | முதன்முறையாக இணையும் சிரஞ்சீவி மோகன்லால் கூட்டணி | பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி |

விக்ரனன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடித்துள்ள ‛மாஸ்க்' படம் நவ., 21ல் ரிலீஸாகிறது. இந்த படத்தை தயாரித்து இருப்பதோடு, நெகட்டிவ் வேடத்திலும் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. டார்க் திரில்லர் படமாக உருவாகி உள்ளது.
ஆண்ட்ரியா அளித்த ஒரு பேட்டியில் கூறும்போது, ‛‛வட சென்னை படத்தில் நான் நடித்த சந்திரா வேடத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அதேசமயம் அதன்பின் எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனக்கு எந்த மாதிரியான வேடம் தர வேண்டும் என்ற குழப்பம் இருந்தது. நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் இன்றைக்கு பல ஹீரோக்கள் அவர்களது படங்களில் பெண்களுக்கு பவர் புல்லான வேடங்கள் தர விரும்புவதில்லை'' என்றார்.