மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா |

தங்கலான் படத்தை அடுத்து தற்போது தமிழில் கார்த்தியுடன் சர்தார் 2 படத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக தி ராஜா சாப் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மாருதி இயக்கி உள்ள இந்த படம் காதல் திகில் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கிறது. 2026 சங்கராந்திக்கு இந்த படம் திரைக்கு வருகிறது. இப்படத்தில் பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்திக் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.
மாளவிகா மோகனன் கூறுகையில், பிரபாஸ் உடன் இணைந்து நான் நடித்துள்ள தி ராஜா சாப் படம் ஜனவரி ஒன்பதாம் தேதி சங்கராந்தி மற்றும் பொங்கலுக்கு ரிலீசாகிறது. இதனால் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறேன். இதில் அறிமுக நாயகி போல் இல்லாமல் எனக்கு ஒரு சிறந்த வேடத்தை கொடுத்திருக்கிறார்கள். பெரும்பாலும் சூப்பர் ஸ்டார்களின் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் இதில் நான் எதிர்பார்த்ததை விட அழுத்தமான வேடம் கொடுத்திருக்கிறார்கள். இதுபோன்ற பெரிய நடிகரின் படங்களில் நடிகைகளுக்கு ஒரு பாடலுடன், 5 காட்சிகள் கிடைக்கும். ஆனால் நான் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டசாலி. அதனால் இந்த படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கிறது. கூட்டுதலான காட்சிகளும் கிடைத்துள்ளது என்கிறார் மாளவிகா மோகனன்.