பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... | தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 கோடி | தணிக்கையில் பிரச்னை... மாற்றம் வேண்டும் என்கிறார் கமல் | கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம் | பிளாஷ்பேக் : ஒரேநாளில் மோதி வெற்றி பெற்ற 3 ஹீரோக்கள் | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த டி.எஸ்.பாலய்யா | 'வா வாத்தியார்' படத்தை ஏலம் விட கோர்ட் உத்தரவு | தமிழில் வெளியாகும் சாரா அர்ஜுனின் தெலுங்கு படம் |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த அக்டோபர் 21ம் தேதி திரைக்கு வந்த படம் தம்மா. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 176 கோடி வசூலித்து இருக்கிறது. ஆதித்யா சர்போத்தார் என்பவர் இயக்கிய இந்த படம் தியேட்டர்களில் ஓடி முடித்து விட்ட நிலையில், வருகிற டிசம்பர் 2ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள். இதேபோல் தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்து கடந்த நவம்பர் 7ம் தேதி திரைக்கு வந்த படம் தி கேர்ள் பிரண்ட். ராகுல் ரவீந்திரன் இயக்கிய இந்த படமும் டிசம்பர் மாதத்தில் ஓடிடிக்கு வருகிறது. இன்னும் சில தினங்களில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட உள்ளது.