டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

'ராஞ்சானா, அட்ராங்கி ரே' ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் 'தேரே இஸ்க் மே'. இதில் கதாநாயகியாக கீர்த்தி சனோன் நடித்திருந்தார்.
இத்திரைப்படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஹிந்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து வட இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படம் முதல் இரண்டு நாட்களில் இந்திய அளவில் ஹிந்தி பதிப்பில் மட்டும் ரூ.31.63 கோடி நெட் வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளனர். இதில் முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாள் வசூல் அதிகம் என குறிப்பிட்டுள்ளனர். இந்த படம் இந்திய அளவில் நிகழ்த்தும் வசூல் தனுஷுக்கு புதிய மைல்கல் ஆக அமையும் என தெரிவிக்கின்றனர்.