டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கிழக்கு வாசல், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், எஜமான், பொன்னுமணி, ராஜகுமாரன் போன்ற ஹிட் படங்களை இயக்கிய, ஆர்.வி.உதயகுமார் இப்போது தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவராக இருக்கிறார். தொடரி படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்தவர், இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். பெரும்பாலும் அரசியல்வாதி வேடத்தில் நடிக்கிறார். வினோத் இயக்கும் ரெட் லேபிள் படத்திலும் , ஹீரோயின் அப்பாவாக நடித்து இருக்கிறார்.
சென்னையில் நடந்த இந்த படவிழாவில் அவர் பேசுகையில், ‛‛நான் பல படங்களை இயக்குனர் என்றாலும், நடிக்கும்போது எந்த விஷயத்திலும் தலையிடமாட்டேன். இயக்குனர் சொல்வதைதான் கேட்பேன். நான் கோவையை சேர்ந்தவன். அந்த ஊர்க்காரர்கள் எனக்கு பட வாய்ப்புகளை கொடுக்கவில்லை. மற்ற மாவட்டத்துக்காரர்கள் கொடுக்கிறார்கள் என்று ஜாலியாக குறிப்பிட்டார். அதேபோல் கடந்த 10, 15 ஆண்டுகளாக தமிழில் மிக சிறந்த படங்கள் அதிகம் வருவது இல்லை. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் படங்கள் வரவில்லை. ஒரு சாராருக்கு பிடித்த படங்களே அதிகம் வருகின்றன். சினிமாவை பொறுத்தவரையில் இயக்குனர் தான் கேப்டன். அவர்களை யாரும் தவறாக பேசக்கூடாது. அவர்களுக்கு இழுக்கு வரும்படி நடந்து கொள்ளக்கூடாது'' என்றார்.