ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தை விஷால் இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். முதலில் இந்த படத்தை ஈட்டி பட இயக்குனர் ரவி அரசு இயக்கவிருந்தார். ஆனால், விஷால், ரவி அரசுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இந்த படத்திலிருந்து ரவி அரசு நீக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த படத்தை முழுவதுமாக விஷால் கையில் எடுத்து இயக்கி வருகிறார். இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் 60% சதவீதம் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. தற்போது விஷால் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், " மகுடம் படத்தில் இடம்பெறும் 60ம் காலகட்ட சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. அடுத்தகட்டமாக 90ம் காலகட்டம் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. இதுதான் இறுதிகட்ட படப்பிடிப்பு" எனவும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.