டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா சமீபத்தில் காலமானார். அவரின் 90வது பிறந்த தினம் இன்று(டிச., 8). இதையொட்டி திரையுலகினர், ரசிகர்கள் பலரும் அவரின் நினைவுகளை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். தர்மேந்திராவின் மனைவியும், நடிகையுமான ஹேமமாலினி வெளியிட்ட பதிவில்...
‛‛என் அன்பான இதயமே.... பிறந்தநாள் வாழ்த்துகள். இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது நீங்கள் என்னை விட்டு பிரிந்து. இதயம் நொறுங்கி போய் உள்ளேன். அதை மெதுவாக சேகரித்து என் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்து கொண்டிருக்கிறேன்.
நமது இனிய வாழ்க்கையின் மகிழ்ச்சியான நினைவுகள் ஒருபோதும் அழியாதவை. அந்தத் தருணங்களை மீண்டும் நினைத்துப் பார்ப்பதே எனக்கு பெரும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நமக்கு கிடைத்த அழகிய ஆண்டுகளுக்காகவும், நம்முடைய அன்பை உறுதிப்படுத்தும் நம்முடைய இரு அழகிய மகள்களுக்காகவும், என் இதயத்தில் எப்போதும் தங்கியிருக்கும் அத்தனை அழகான, மகிழ்ச்சியான நினைவுகளுக்காகவும் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
உங்கள் பிறந்தநாளில் உங்கள் பணிவுக்காகவும், இதயத்தின் நன்மைக்காகவும், மனிதநேயத்தின் மீதான அன்புக்காகவும் நீங்கள் பெரிதும் தகுதியான அமைதியின் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் கடவுள் உனக்கு அருள்வாராக என்று பிரார்த்திக்கிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் அன்பே... நம்முடைய இனிய 'ஒன்றாக' இருந்த தருணங்கள்...!'' என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.